விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
கே ஜி எப் படத்தின் இரண்டு பாகங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது ‛டாக்ஸிக்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் யஷ். தேசிய விருது பெற்ற இயக்குனரும் நடிகையுமான கீத்து மோகன் தாஸ் இந்த படத்தை இயக்குகிறார். அவர் வழக்கம்போல தனது பாணியில் கலைப்படமோ அல்லது விருது படமோ எடுப்பார் என எதிர்பார்த்தால் அதற்கு முற்றிலும் மாறாக முழு நீள ஆக்சன் படமாக இதை உருவாக்க இருக்கிறார்.
அதற்கேற்றார் போல் யஷ் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக அதிக அளவில் சண்டைக் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெறுகின்றன. தற்போது இந்த படத்தின் சண்டைக் காட்சி ஒன்று மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதை படமாக்குவதற்காக ஹாலிவுட்டில் புகழ் பெற்ற ஆக்சன் டைரக்டரான ஜேஜே பெரி என்பவர் மும்பை வந்துள்ளார். இவர் எக்ஸ்பென்டபிள்ஸ் 3, ஸ்பை, ஸ்கை கிராப்பர் உள்ளிட்ட பல படங்களில் வியக்க வைக்கும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.