விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் |

சின்னத்திரை நடிகையான நிவேதிதா, ‛வாணி ராணி' தொடரில் அறிமுகமாகி தமிழில் பல தொடர்களில் நடித்திருக்கிறார். 2019ம் ஆண்டு சக நடிகரான ஆர்யனை திருமணம் செய்து கொண்ட நிவேதிதா கருத்து வேறுபாடு காரணமாக மூன்று வருடங்களுக்கு முன் ஆர்யனை விவாகரத்து செய்துவிட்டார். இதனையடுத்து திருமகள் தொடரில் நடித்து வந்த போது நடிகர் சுரேந்தருக்கும் நிவேதிதாவுக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இந்நிலையில், நிவேதிதா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன் நிவேதிதாவின் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதனையடுத்து நிவேதிதா - சுரேந்தர் தம்பதியினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.