பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை நிவேதிதா சதீஷ். மகளிர் மட்டும், வணக்கம், சில்லு கருப்பட்டி, இந்த நிலை மாறும், உடன்பிறப்பே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது 'கேப்டன் மில்லர்' எனும் பெரிய பட்ஜெட் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: இது எனக்கு ஒரு கனவு போல தோன்றுகிறது. வளர்ந்து வரும் நடிகையான எனக்கு இது மிகப்பெரிய மேடையாக இருக்கிறது. நான் நடிக்க வந்தபோது எனக்கு மூன்று பெரிய கனவுகள் இருந்தன. அதனை நான் எனது எல்லா நேர்காணல்களிலும் கூறி வந்திருக்கிறேன். முதல் கனவு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க வேண்டும். இரண்டாவது கனவு ஒரு பீரியட் பிலிமில் நடிக்க வேண்டும். மூன்றாவது கனவு தனுஷ் உடன் நடிக்க வேண்டும். எனது இந்த மூன்று கனவுகளையும் கேப்டன் மில்லர் நிறைவேற்றி தந்திருக்கிறார்.
இந்த படத்தில் அனைவருமே மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தோம். தனுஷ் மற்றும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் பட்ட கஷ்டங்களை விட நாங்கள் பட்ட கஷ்டம் மிகவும் குறைவானது. எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் மிகப் பிரமாண்டமாக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். மிகப்பெரிய திருப்பம் தரும் படமாக இது அமையும் என்று நம்புகிறேன் என்றார்.