தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

கடந்த வருடம் இறுதியில் வெளிவந்த 'ஜோ' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் பவ்யா த்ரிகா. சென்னையில் வாழும் பஞ்சாபி பெண்ணான இவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படித்து பட்டம் பெற்றவர். "எந்த பின்புலமும் இல்லாமல் வளர்ந்து சாதனை படைத்த சமந்தா போல வளர" வேண்டும் என்கிறார் பவ்யா.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது : சிறுவயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக இருந்தது. என் அப்பாவின் உறுதுணை எனக்கு கை கொடுத்தது. பல தமிழ் திரைப்படங்களை பார்த்து தமிழும், சினிமாவின் சாராம்சத்தை பார்த்தே வளர்ந்தேன். நடிப்பிற்கான தேடலில் இருக்கும் போது 'கதிர்' என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. அதைத்தொடர்ந்து, கல்லூரியிலும் என்னுடைய தோழிகள் என்னை ஊக்குவித்ததால் 'ஜோ' படத்தில் நடித்தேன். ஜோ திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்வான நினைவுகளாக இருக்கிறது.
வெற்றி அப்படிங்கறது ஒரு சராசரியாக இருக்கக்கூடிய நடிகைகளுக்கு எந்த அளவுக்கு மாறும் என்று நினைக்கும் போது ரொம்பவே ஆச்சரியமாக இருக்கு. இன்று நான் எங்கு சென்றாலும், மக்கள் என்னை அங்கீகரித்து வந்து பேசுகிறார்கள் அதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க உள்ளேன். அதேநேரத்தில், ஜோ திரைப்படம் எனக்கு கொடுத்த அங்கீகாரமும் புகழும் மனதில் வைத்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இந்த ஆண்டில் சிறந்த நடிகையாக வலம் வருவேன் என்று நம்புகிறேன்.
எனக்கு சமந்தாவை ரொம்ப பிடிக்கும். காரணம் என்னவென்றால் எந்தவித பின்புலமும் இல்லாமல் தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் நடிச்சு மக்கள் மனசுல இடம் பெற்று இருக்காங்க. அவங்க எனக்கு ஒரு முன்னுதாரணமா இருக்காங்க. சமந்தா போன்று வளர விரும்புகிறேன். என்கிறார்.