'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

சிவாஜி நடித்து, தயாரித்த படம் 'ரத்த பாசம்'. படத்தின் கதையை சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் எழுதியிருந்தார். இந்த படத்தில் சிவாஜியுடன் ஸ்ரீபிரியா, நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன், ஜெய் கணேஷ், பிரமிளா உள்பட பலர் நடித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். கே.விஜயன் படத்தை இயக்கினார்.
இந்த படம் தயாரிப்பில் இருக்கும்போது இயக்குனர் கே.விஜயனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு படத்தை தொடர்ந்து இயக்க முடியாமல் போனது. இதனால் மீதமிருந்த காட்சிகளை சிவாஜியே இயக்கினார். பெரும்பாலான காட்சிகள் சிவாஜியின் வீடான அன்னை இல்லத்திலேயே படமாக்கப்பட்டது. வெளிப்புற காட்சிகளை ராம்குமார் இயக்கியதாகவும் கூறுவார்கள். இதனால் இந்த படத்தின் டைட்டில் கார்டு, மற்றும் விளம்பரங்களில் இயக்குனர் பெயர் இடம்பெறாமல் இருந்தது.