வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
10 ஆண்டுகளுக்கு முன்பு மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வெளியாக இருந்த நிலையில் படத்தை வெளியிட தடை கோரி பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 'இரண்டாம் குத்து' படத்தின் விநியோக உரிமையை பெற்ற ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் (பிசாசு 2 தயாரிப்பாளர்) பாக்கி வைத்திருந்தது. ஐகோர்ட் உத்தரவுப்படி இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர், ஒரு கோடியே 17 லட்சம் மற்றும் ஜி.எஸ்.டி. தொகை 31 லட்சம் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்திற்கு உத்தரவிட்டும் பணத்தை தரவில்லை. எனவே, பிசாசு-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 'பிசாசு-2' திரைப்படத்தை வெளியிட தடை விதித்தது. மேலும், இந்த மனு தொடர்பாக ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது.