இட்லி கடை படத்தை பார்த்த ஜி.வி.பிரகாஷ் | டாப் 5 பட்டியலில் இடம் பிடிக்கும் சிவகார்த்திகேயன் | ‛தக் லைப்' பட அப்டேட் தந்த த்ரிஷா | ‛பென்ஸ்' படத்திற்கு இசையமைக்கும் இளம் பாடகர் | 4 நாட்களில் ரூ.50 கோடி கிளப்பில் லக்கி பாஸ்கர் | மிக அழகாக நடித்த மீனாட்சி சவுத்ரி! துல்கர் சல்மான் வெளியிட்ட தகவல் | பாலிவுட் என்ட்ரி குறித்து சூர்யா சொன்ன பதில்! | கங்குவா, விடுதலை 2 - எஞ்சிய இரண்டு மாதங்களுக்கு இரண்டே பெரிய படங்கள்தான்? | பிளாஷ்பேக்: மகேந்திரன் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி | கன்னட இயக்குனர் குரு பிரசாத் தற்கொலை |
ரஜினிக்கு பிடித்த இயக்குனர் மகேந்திரன், பிடித்த படம் 'முள்ளும் மலரும்'. அப்படிப்பட்ட மகேந்திரன் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார் ரஜினி.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் படத்தைத் தொடர்ந்து மகேந்திரன் இயக்கிய படம் 'பூட்டாத பூட்டுக்கள்'. பஞ்சு அருணாசலம் தயாரித்தார், இளையராஜாவின் இசை அமைத்தார். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தார். இந்த படத்தில் ரஜினியும், அப்போதைய மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஜெயனும் நடிப்பதாக சொல்லப்பட்டது. விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. ஆனால் இந்த படத்தில் நடிக்க மறுத்து கடைசி நேரத்தில் ரஜினி விலகி கொண்டார்.
அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. தமிழகத்தில் ரஜினி போன்று மலையாளத்தில் ஜெயன் ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருந்தார். அவருடன் இணைந்து நடிக்கும்போது தேவையில்லாத ஒப்பீடுகள் வரும் என்று ரஜினி விலகி கொண்டதாக கூறப்படுகிறது.
இன்னொரு காரணம் கதை. கதையின் நாயகன் உப்பிலி பெரிய பயில்வான், கட்டு மஸ்தான உடல்வாகு கொண்டவன். ஆனால் அவனால் ஒரு குழந்தைக்கு தந்தை ஆக முடியாத உடல்நிலை கோளாறு. இதனால் அவன் மனைவி அந்த ஊருக்கு வரும் தியாகு என்ற திருமணமான இளைஞருடன் நெருக்கம் காட்டுவாள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. எழுத்தாளர் பொன்னீலனின் நாவலைத்தான் மகேந்திரன் படமாக்கினார். ஆண்மை இல்லாத பலசாலி, அடுத்தவன் மனைவியோடு கள்ளத் தொடர்பு கொள்ளும் ஒருவன் இந்த இரண்டு கேரடக்டருமே தனக்கு செட் ஆகாது என்று கருதியே ரஜினி விலகியதாக கூறப்படுவதுண்டு.
இந்த படத்தில் ஜெயன் 'உப்பிலி' வேடத்தில் நடித்தார். சாருலதா அவரது மனைவியாக நடித்தார். சுந்தர் ராஜ் தியாகுவாக நடித்தார். இந்த படம் தோல்வி அடைந்தது.