பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கடந்த 27ம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதம் முதல் தமிழகம் முழுக்க சென்று மக்களை சந்தித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடப் போகிறார் விஜய். இந்த நிலையில் தனது தமிழக வெற்றிக் கழகம் சம்பந்தப்பட்ட செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ‛தமிழ் ஒளி' என்ற பெயரில் ஒரு 24 மணி நேர செய்தி சேனலை விரைவில் அவர் தொடங்கப் போகிறார். இதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.