எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! |
தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் ஆயிரம் கோடி வசூலை எட்டியதில்லை. அதனால் அந்த சாதனையை தற்போது ரஜினியை வைத்து தான் இயக்கி வரும் கூலி படத்தில் செய்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மேலும், ரஜினி படம் என்றாலே பக்கா கமர்சியலாக இருக்கும். அதோடு ரஜினி ஆங்காங்கே பஞ்ச் டயலாக் பேசுவார். ஆனால் சமீபகாலமாக ரஜினி படங்களில் அது இடம் பெறவில்லை.
குறிப்பாக கடந்த மாதம் திரைக்கு வந்த வேட்டையன் ரஜினி படம் போல் இல்லாமல் ஞானவேல் படமாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூலி படத்தை முழுக்க முழுக்க தனது பாணி படமாகவே எடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், ரஜினி ரசிகர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு கமர்சியல் விஷயங்களையும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்து வருகிறார். அது மட்டும் இன்றி சில இடங்களில் ரஜினியை பஞ்ச் டயலாக் பேசவும் வைத்துள்ளார். இது போன்ற ரஜினி ரசிகர்கள் எதிர்பார்க்கிற விஷயங்கள் படத்தில் இருந்தால் தான் தாங்கள் எதிர்பார்க்கிற வசூலை எட்டிப் பிடிக்க முடியும் என்பதினால் தனது பாணியில் படம் உருவானபோதும், ரஜினி பாணியையும் கலந்து கூலி படத்தை இயக்கி வருகிறாராம் லோகேஷ் கனகராஜ்.