திரையுலகில் 22 ஆண்டுகள் : சூர்யா 45 படப்பிடிப்பில் த்ரிஷா கேக் வெட்டி கொண்டாட்டம் | படைதலைவன் படத்தின் டிரைலரில் தனது ஹிட் பாடலுடன் முகம் காட்டிய விஜயகாந்த் | அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராஷ்மிகா - நானி | பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : கண்ணாம்பா வசனத்தால் தோல்வி அடைந்த படம் | 'கொரோனா குமார்' வழக்கு முடித்து வைப்பு | லண்டன் இசை பள்ளியின் கவுரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம் | ஹீரோ ஆனார் ரோபோ சங்கர் | மற்றுமொரு ஓடிடி தளத்தில் ‛ஹிட் லிஸ்ட்' | பெண் குழந்தைக்குத் தாயான ராதிகா ஆப்தே |
விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக கூறி வந்தார். ஆனால் உடனடியாக அவரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயனை சந்தித்து அவர் கதை சொன்ன போது, அந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்தவர், தான் ஏற்கனவே கமிட் ஆகியிருக்கும் சில படங்களை பட்டியல் போட்டுள்ளார் .
அதாவது தற்போது நடித்துள்ள அமரன் தீபாவளிக்கு திரைக்கு வரும் நிலையில் இதையடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் எனது 23 வது படத்தில் நடித்து வருகிறேன். அந்த படத்தை முடித்த பிறகு டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் புறநானூறு ஆகிய படங்களில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருப்பதை தெரிவித்த சிவகார்த்திகேயன், கைவசம் உள்ள மூன்று படங்களையும் முடித்த பிறகு தான் உங்கள் இயக்கத்தில் நடிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதன் காரணமாகவே அதுவரைக்கும் சிவகார்த்திகேயனுக்காக வெயிட் பண்ண வேண்டாம் என்று வேறு சில நடிகர்களை சந்தித்து கால்ஷீட் கேட்டு வருகிறார் வெங்கட் பிரபு .