எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
கோட் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 69 வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவே தனது கடைசி படம் என்று அறிவித்துவிட்டார் விஜய். ஆனால் விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய அட்லி, ஜவான் படத்தை அடுத்து ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் மீண்டும் ஒரு படம் இயக்கப் போவதாகவும், அந்த படத்தில் விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து அட்லி விஜய் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்புதல் வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது போக போக தான் தெரியும்.