இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? | அபார்ட்மென்ட் வாங்கத் தவிக்கும் '3 பிஹெச்கே', அதைவிட்டு போகச் சொல்லும் 'பறந்து போ'!! | டியூட் படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? | நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! |
வரும் தீபாவளி கொண்டாட்டமாக, முதல் வரிசையில் இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் அந்த இடத்தை நோக்கி முன்னேறி வரும் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் வரும் அக்-31 ஆம் தேதி வெளியாகிறது. முதலில் சோலோ ரிலீஸ் என்கிற அளவில் தான் இருந்த நிலையில் தற்போது துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள லக்கி பாஸ்கர் திரைப்படமும் தீபாவளி ரேஸில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி ராணுவப் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.
லக்கி பாஸ்கர் திரைப்படம் ஒரு காமெடி கலந்த திரில்லாராக உருவாகியுள்ளது. கடந்த வருடம் தனுஷை வைத்து வாத்தி என்கிற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கி அட்லூரி இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள் மாறி மாறி நடைபெற்று வரும் நிலையில், இரண்டு படங்களின் ஹீரோக்களும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட நிகழ்வும் நடந்தது.
அப்போது உடன் இருந்த லக்கி பாஸ்கர் பட நாயகி மீனாட்சி சவுத்ரி இந்த தருணத்தை புகைப்படம் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறும்போது, “பாஸ்கர் மற்றும் சுமதி இருவருமே முகுந்த் வரதராஜனை சந்தித்தது மிகச்சிறந்த தருணமாக இருந்தது” என்று கூறியுள்ளார். நடிகர் துல்கர் சல்மானும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு இரண்டு படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.