பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
இயக்குனர் சிவா டைரக்சனில் சூர்யா நடிப்பில் வரலாற்று பின்னணியில் பேண்டஸி படமாக உருவாகியுள்ள படம் கங்குவா. வரும் நவம்பர் 14ம் தேதி இந்த படம் பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. அந்தவகையில் நேற்று சென்னையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தாலும் கூலி படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டிருப்பதன் காரணமாக இந்த விழாவிற்கு அவரால் வர முடியவில்லை.
இந்த தகவலை விழா துவங்கும் முன்னதாக வெளியிடப்பட்ட ஒரு வாழ்த்து செய்தி வீடியோ மூலமாக ரஜினிகாந்தே கூறினார். மேலும் ஹீரோ சூர்யா, இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோரின் திறமை, சுறுசுறுப்பு, கடின உழைப்பு பற்றி ரொம்பவே பாராட்டிய அவர் இந்த படத்தின் கதை தனக்காகவே எழுதப்பட்டது என்கிற ஒரு தகவலையும் கூறி ஆச்சரியப்படுத்தினார்.
“அண்ணாத்த படப்பிடிப்பின் போது இயக்குனர் சிவாவிடம் நாம் இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்றும் விதமாக ஒரு பீரியட் கதை ஒன்றை எழுதுங்கள், நிச்சயம் அது நன்றாக இருக்கும் எனக் கூறியிருந்தேன், ஆனால் தற்போது அந்த கதை தான் சூர்யா நடிப்பில் 'கங்குவா'வாக உருவாகி இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒருவேளை இந்த கதை பிடித்துப் போனதால் இந்த கதையை நாமே பண்ணிவிடலாம் என தயாரிப்பாளர் மற்றும் சூர்யா தரப்பிலும் முடிவு செய்து விட்டார்கள் போல. அந்த வகையில் சூர்யா இப்போது நடித்திருப்பது எனக்காக எழுதப்பட்ட கதையில் தான்” என்று மகிழ்ச்சியும் ஜாலியுமாக இந்த தகவலை பகிர்ந்து கொண்டார் ரஜினிகாந்த்.
பொதுவாக சில படங்கள் வெளிவந்த பின் இது அந்த ஹீரோவுக்காக எழுதப்பட்டது, அதன் பிறகு இவர் நடித்தார் என்று சொல்லப்படுவது உண்டு. அந்த வகையில் ரஜினிகாந்தே தற்போது ஓப்பனாக கங்குவா பற்றி கூறியுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இன்னும் அதிகரிக்கவே செய்துள்ளது.