மிஸ் யூ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | இயக்குனர் பாலாவிற்கு விழா | விவாகரத்து அல்லது பிரேக்கப் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த தருணம் ; ஐஸ்வர்ய லட்சுமி அதிரடி | வருகிறது 'புஷ்பா 3': சொல்லாமல் சொன்ன வைரல் புகைப்படம் | சைப் அலிகான் - நிகிதா தத்தா நடித்த ‛ஜூவல் தீப்' படப்பிடிப்பு நிறைவு | ‛இட்லி கடை' படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் 20 வயது தனுஷ் | ரொமான்ஸ் இல்லாத கணவர் ; பிரித்விராஜை கலாய்த்த மனைவி | கடைசி நேரத்தில் சன்னி லியோன் வருகைக்கு தடை போட்ட போலீசார் ; ரசிகர்கள் ஏமாற்றம் | மாலத்தீவில் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சிக்கு சென்ற வேதிகா | போதும் மகளே.. அபர்ணா பாலமுரளியிடம் கையெடுத்து கும்பிட்ட தந்தை |
மலையாள திரை உலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் இவர் ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த சந்தனா, அதன் பிறகு மலையாள பின்னணி பாடகியான அம்ருதா சுரேஷ், அதன் பின்னர் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என கடந்த 2008லிருந்து திருமணம் செய்வதும் பின்னர் அவர்களிடம் இருந்து விவாகரத்து பெறுவதுமாக இதுவரை மூன்று திருமணங்களை செய்து விவாகரத்தும் பெற்று விட்டார். இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது முறைப் பெண்ணான கோகிலா என்பவரை சமீபத்தில் நான்காவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகர் பாலா. இதுதான் தனது கடைசி திருமணம் என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
இந்த நிலையில் அவரது மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத் தற்போது சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடிகர் பாலா மீது ஏதாவது குற்றச்சாட்டுகளை அடுக்குவார் என பார்த்தால் நமக்கு ஏமாற்றமே..
அந்த வீடியோவில் எலிசபெத் கூறும்போது, “நான் சில விஷயங்கள் பற்றி கேள்விப்பட்டேன். அதை இந்த வீடியோவில் சொல்வது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நான் வருத்தப்பட்டது உண்மை. என்றாலும் அது பற்றி இங்கே விவாதிக்க விரும்பவில்லை. அதேசமயம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நான் இப்போது அகமதாபாத்தில் இருக்கிறேன். அங்கே ஒரு நோயாளியின் வாழ்க்கையில் சிகிச்சை அளித்து தக்க சமயத்தில் காப்பாற்றிய மகிழ்ச்சியில் இருக்கிறேன். அவர்கள் எனக்கு நிறைய சாக்லேட் மற்றும் இனிப்புகளை பரிசாக கொடுத்தார்கள். நான் செய்தது ஒரு சின்ன விஷயம் தான் என்றாலும் சிலர் அது குறித்து தங்களது அன்பை வெளிப்படுத்தும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சில விஷயங்களால் வருத்தமாக இருந்த நான் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.