லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் மோகன்லால் - மீனாவின் இளைய மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் எஸ்தர் அனில். அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் கமலின் மகளாக நடித்த இவர் அதன் தெலுங்கு ரீமேக்கிலும் கூட தனது கதாபாத்திரத்தில் தானே நடித்திருந்தார். அதன்பிறகு வளர்ந்து பருவப் பெண்ணாக மாறிய எஸ்தர் அனில் இந்த வருடம் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான மின்மினி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் கல்லூரியில் சுற்றுப்புறச் சூழல் குறித்த முதுகலை பட்டப்படிப்பு படிப்பதற்காக சேர்ந்துள்ளார் எஸ்தர் அனில். இவர் இந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதை ஒரு கனவாகவே வைத்திருந்தார் என எஸ்தர் அனிலின் தந்தை கூறியுள்ளார். இதற்கு முன்னதாக மும்பையில் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் தனது இளநிலை படிப்பை எஸ்தர் அனில் முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.