மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் |

சிவாஜியும், ரஜினியும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதேபோல கமலும், சிவாஜியும் இணைந்து நடித்துள்ளனர். மூவரும் இணைந்து நடித்த படம் 'நட்சத்திரம்'. ஆனால் இதில் மூவருமே அவரவர்களாக நடித்திருப்பார்கள்.
1978ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'சிவரஞ்சனி' என்ற படத்தை தெலுங்கு இயக்குனர் தாசரி நாராயண ராவ் தமிழில் நட்சத்திரம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்த படத்தில் ஸ்ரீபிரியாதான் கதையின் நாயகி, அவரது கணவராக மோகன் பாபுவும், காதலராக தெலுங்கு நடிகர் ஹரி பிரசாத்தும், நடித்தனர். இவர்களுடன் சிவச்சந்திரன், மனோரமா, ஜெயமாலினி நடித்திருந்தார்கள்.
படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவாஜி, ரஜினி, கமல், நாகேஷ், பிரபா, சாவித்ரி, கே.ஆர்.விஜயா, ராதா, மஞ்சுளா, ஸ்ரீவித்யா, புஷ்பலதா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஸ்ரீப்ரியா, ஸ்ரீரஞ்சனி என்ற நடிகையாக நடித்திருந்ததால் முன்னணி நடிகர்கள் அனைவரும் அவர்களாகவே வந்து சென்றார்கள்.
படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தனர். 'அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை...' என்ற புகழ்பெற்ற பாடல் இந்த படத்தில் இடம்பெற்றது. 'பொன்னாங்கன்னி பூத்து வந்ததோ...' என்ற பாடலில் ஸ்ரீபிரியாவுடன் கமல் இணைந்து ஆடினார்.
திருமணமான ஒரு திரைப்பட நடிகைக்கு தனது ரசிகருடன் வரும் காதல் தான் படம்.




