காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
கல்கி 2898 ஏடி படத்தின் வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராஜா சாப்'. மாளவிகா மோகனன், நிதி அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, மாருதி இயக்குகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தை பீபுல் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கின்றனர் . தற்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நாளை அக்டோபர் 23ம் தேதி பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய அப்டேட் வெளியாகிறது என போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இப்படம் அடுத்த வருடம் 2025 ஏப்ரல் 10ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.