'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ராணா டகுபட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 1, பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் வட இந்தியாவிலும் பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. அவற்றின் வெற்றி தெலுங்குத் திரையுலகத்தையே மாற்றியது.
ராஜமவுலி இந்திய அளவில் பெரிய இயக்குனர்களில் ஒருவராக மாறினார். தெலுங்கில் மட்டுமே தனது வியாபார வட்டத்தை வைத்திருந்த பிரபாஸ் அதன்பின் பான் இந்தியா நடிகராக உயர்ந்தார். ராஜமவுலி இயக்கத்தில் அடுத்த வந்த 'ஆர்ஆர்ஆர்' படமும் அதே போல பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் நடித்த ராம் சரண், ஜுனியர் என்டிஆர் பான் இந்தியா பிரபலமாகினார். அப்படத்தின் பாடலும் ஆஸ்கர் விருதை வென்றது.
'பாகுபலி 2' படம் வெளிவந்த பின்பே 'பாகுபலி 3' பற்றிய பேச்சுக்களும் எழுந்தது. ஆனால், அது எப்போது உருவாகும் என்பது குறித்த நிலையான தகவல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் 'பாகுபலி 1' படத்தை தமிழகத்தில் வெளியிட்ட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் 'பாகுபலி' தயாரிப்பாளர்களிடம் பேசிய போது அவர்கள் 'பாகுபலி 3' பற்றி திட்டமிட்டு வருகிறார்கள் என்பது தெரிந்தது என்று கூறியுள்ளார்.
ராஜமவுலி அடுத்து மகேஷ் பாபு நடிக்க உள்ள படத்தை இயக்கும் வேலைகளில் உள்ளார். அந்தப் படத்தை எடுத்து முடித்து வெளியிட்ட பின்பு 'பாகுபலி 3' பட வேலைகளில் இறங்கலாம் எனத் தெரிகிறது.