கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 69வது படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் விஜய் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த ஒரு தகவல் தற்போது கசிந்து இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் நடிப்பதாக தெரியவந்துள்ளது. சமூகத்தில் நடந்து வரும் ஒரு முக்கிய பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் விஜய்யின் கதாபாத்திரம் இப்படத்தில் அமைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
ஏற்கனவே கார்த்தி நடிப்பில் எச்.வினோத், 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை காவல்துறை சம்பந்தப்பட்ட கதையில் இயக்கிய நிலையில், தற்போது இந்த படமும் காவல்துறை சம்பந்தப்பட்ட இன்னொரு கதைக்களத்தில் உருவாகி வருகிறது. அதேசமயம் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியான விஜய், அரசியல்வாதிகளுடன் மோதுகிறாரா? இல்லை வேறு சமூக பிரச்னையை வேரறுக்கிறாரா? என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது. மேலும் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் நிலையில், பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், மமிதா பைஜு, பிரியாமணி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.