2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கிர்த்தி ஷெட்டி ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி சுருக்கமாக 'எல்.ஐ.கே ' என குறிப்பிடுகின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
அனிரூத்தின் பிறந்தநாளை முன்னிட்டு எல்.ஐ.கே படத்திலிருந்து 'தீமா' எனும் முதல் பாடலை இன்று காலை வெளியிட்டனர். விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இப்பாடலை அனிரூத் பாடியுள்ளார். முதல் முறையாக அனிரூத் மூச்சு விடாமல் வேகமாக பாடியுள்ளதாக பதிவிட்டுள்ளார். காதலிக்காக காதலன் பாடும் காதல் பாடலாக வெளியாகி உள்ளது.