தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” | அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல் | 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம் | அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? |

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த வேட்டையன் படம், நான்கு நாட்களில் 240 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக நேற்று லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் சமீபத்தில் உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ரஜினி. அப்போது மருத்துவர்கள் அவரது வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை அகற்றினார்கள்.
மூன்று தினங்களுக்கு பிறகு வீடு திரும்பிய ரஜினி தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார். மேலும், கூலி படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென்று ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை மறுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதற்கு முன்கூட்டியே தனக்கு இப்படி ஒரு சிகிச்சை இருப்பதாக ரஜினி எங்கள் இடத்தில் தெரிவித்துவிட்டார். அதனால் திடீரென்று அவருக்கு நலக்குறைவு ஏற்படவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினி சார் ஏற்கனவே தனக்கு சிகிச்சை இருப்பதாக சொல்லிவிட்டதால் அந்த காலகட்டத்தில் வேறு நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு அதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. என்றாலும் அக்டோபர் 16ம் தேதி முதல் ரஜினி மீண்டும் கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். அடுத்தபடியாக அவரது காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட உள்ளது என்று தெரிவித்திருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்த கூலி படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகிறார்.