பயணம் எளிதல்ல! ; மங்காத்தா நடிகைக்கு அஜித் சொன்ன அட்வைஸ் | பழம்பெரும் நடிகையான ‛கன்னடத்து பைங்கிளி' சரோஜாதேவி காலமானார் | சுரேஷ்கோபி படத்துக்கு ஒரு வழியாக யு/ஏ சான்றிதழ் கொடுத்த சென்சார் | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி |
கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், சைப் அலிகான், ஜான்வி கபூர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 27ம் தேதி வெளியான படம் 'தேவரா'. இப்படம் 16 நாட்கள் முடிவில் ரூ.500 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தில் இந்த ஆண்டில் 500 கோடி வசூலைக் கடக்கும் இரண்டாவது படம் இது. இதற்கு முன்பு 'கல்கி 2898 எடி' படம் 1100 வசூலைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் 350 கோடி வசூலுடன் 'ஹனுமான்' படம் இருக்கிறது.
ஜுனியர் என்டிஆர் தனி கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம் ஒன்று 500 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. ஜுனியர் என்டிஆர் அடுத்து 'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான எதிர்பார்ப்பை 'தேவரா' படத்தின் வசூல் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. அப்படத்திற்கு முன்னதாகவே 'தேவரா' படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாக வாய்ப்புள்ளது.