'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
1980களில் பிசியான நடிகையாக இருந்தார் லட்சுமி. அவருக்கு திடீரென இயக்குனராகும் ஆசை வந்தது. அவரிடம் சொந்தமாக கதை எதுவும் இல்லை. முதல் படம் என்பதால் குழந்தைகளை வைத்து இயக்கலாம் என்று முடிவு செய்தார். அப்போது பாலிவுட்டில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படமான 'கட்டா மிட்டா' நினைவுக்கு வந்தது. அந்த படத்தை சற்று மாற்றி அமைத்து தமிழில் இயக்க முடிவு செய்தார். 'கட்டா மிட்டா' 1968ல் வெளியான ஹாலிவுட் படமான 'யுவர்ஸ் மைன் அண்ட் அவர்ஸ்' என்ற படத்தின் ரீமேக்.
இரண்ட சிங்கிள் பெற்றோர்களின் குழந்தைகள் தங்கள் தாய் தந்தைக்கு திருமணம் செய்து வைப்பதுதான் படத்தின் கதை. இந்த கதையை படமாக்க போவதாக கே.பாலச்சந்தரிடம் சொல்லவும், அவர் இயக்குனர் மேற்பார்வை செய்து தருவதாக சொன்னார். தனது சிஷ்யர் விசுவை வசனம் எழுதி கொடுக்கச் சொன்னார் இப்படியாக உருவானது 'மழலைப் பட்டாளம்', கன்னடத்தில் 'மக்கள சைன்யா' என்ற பெயரிலும் உருவானது. கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தனும், சுமித்ராவும் நடித்தனர்.
படம் வெளியானபோது பெரிய வரவேற்பு இல்லை. அதன் பிறகு பத்திரிகைகளின் விமர்சனங்கள் மூலம் படம் விளம்பரமாக குழந்தைகளுக்கு பிடித்த படமானது. எட்டு வாரங்களுக்கு பிறகு லேட் பிக்அப் ஆகி ஒரு சில தியேட்டர்களில் 100 நாளையும் தொட்டது.