'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? |
சமீபத்தில் தெலுங்கானா அமைச்சர் ஒருவர் நடிகை சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து குறித்து சர்ச்சையான கருத்து கூறி ஏற்பட்ட பரபரப்பு அடங்கிய நிலையில், சமந்தா அதையெல்லாம் ஒதுக்கி விட்டு நவராத்திரி வழிபாடு மற்றும் சினிமா நிகழ்வுகள் என மாறி மாறி கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் ஹிந்தியில் நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள ஜிக்ரா திரைப்படம் வரும் அக்.,11ம் தேதி வெளியாக இருக்கிறது. தெலுங்கிலும் இந்த படம் வெளியாக இருப்பதை தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தா மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், சமந்தா பற்றி பேசும்போது, “நடிகர் ரஜினிகாந்த்க்கு அடுத்தபடியாக இந்திய அளவில் ரசிகர்களை பெற்றிருப்பவர் சமந்தா. அவருடன் மூன்று படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். சமந்தா நடித்த 'ஏ மாயா செசாவே' படம் வெளியானபோது அல்லு அர்ஜுன் அவரது மிகப்பெரிய ரசிகராகவே மாறிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பாராட்டினார்.
அதேபோல நடிகை ஆலியா பட் பேசும்போது, “நடிகைகள் என்றாலே ஒருவருக்கொருவர் போட்டி போட வேண்டும் என்று தான் சொல்வார்கள். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. இதோ இங்கே என்னுடைய படத்தை புரமோட் பண்ணுவதற்காக பான் இந்தியா சூப்பர் ஸ்டார் சமந்தா வந்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்” என்று கூறியவர், “நானும் சமந்தாவும் இணைந்து நடிக்கும் விதமாக ஒரு படத்தை எழுதி நீங்கள் இயக்கினால் நன்றாக இருக்கும்” என இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸிடம் ஒரு கோரிக்கையும் வைத்தார்.