டெஸ்ட் - நேரடி ஓடிடி வெளியீட்டிலேயே பெரிய லாபம் | மோகன்லால் - விக்ரம் நேரடி மோதல் | 'இட்லி கடை' - இன்னும் தயாராகவில்லையா? | 'சிம்பு 49' படத்தில் சந்தானம்? ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரம் | 'கேம் சேஞ்ஜர்' கருத்து சொன்ன தமனை 'அன்பாலோ' செய்த ராம் சரண் | 'எல் 2 எம்புரான்' டிரைலர்களில் 'லைக்கா' பெயர் | ''மதம் மாற்ற முயற்சி பண்ணாதீங்க..'': பரபரப்பு வசனங்களுடன் 'பரமசிவன் பாத்திமா' டிரைலர் | மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
தற்போது 'விடாமுயற்சி' படத்தை அடுத்து 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படங்களில் 'விடாமுயற்சி' இந்த ஆண்டு இறுதியிலும், 'குட் பேட் அக்லி' படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்திலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் பைக் பயணம் சென்றுவரும் அஜித்குமார், விரைவில் ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் கார் பந்தயத்திலும் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த நிலையில் அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், 'நீங்கள் கார் ரேஸில் மறுபடியும் இறங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உங்களது விருப்பத்தை செய்கிறீர்கள். உங்களுக்கும் உங்கள் அணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,' என்று பதிவிட்டு இருக்கிறார் ஷாலினி.
![]() |