சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் |
சினிமாவின் கருப்பு வெள்ளை காலகட்டத்தில் 60 சதவீதம் புராண படங்களே வெளிவந்தது. குறிப்பாக ராமாயணம், மஹாபாரதம் கதைகளும், அவற்றின் கிளை கதைகளும் சினிமாவாக மாறிக் கொண்டிருந்தது. அவை அனைத்தும் பக்தி ரசம் சொட்டும் படங்களாக மிகவும் சீரியசான படங்களாக இருந்தது. ஆனால் முதன் முதலாக புராண கதையை காமெடியாக சொன்ன படம் 'கருட கர்வபங்கம்'.
பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையே கொஞ்சம் சீரியஸ், கொஞ்சம் காமெடி கலந்ததுதான். எந்த சீரியசான விஷயத்தையும் நகைச்சுவை ததும்ப கையாள்வதுதான் கிருஷ்ணரின் ஸ்டைல். இதை மையமாக கொண்டு உருவான படம் இது.
கிருஷ்ணருக்கு பாமா, ருக்மணி என இரு மனைவிகள் அவரது சகோதார் பல ராமர், அவரது வாகனம் கருடன். பலராமன் பாண்டவர்களுக்கு எதிராக துரியோதனுடன் நின்றார். பாரத போரில் துரியோதனன் தோற்ற பிறகு, தோல்விக்கு காரணம் கிருஷ்ணன்தான் என்று அவரை பழிவாங்க வருகிறார் பலராமர். கிருஷ்ணரின் மனைவிகளுக்குள் சண்டை மூட்டி குழப்பத்தை விளைவிக்கிறார்.
இன்னொரு பக்கம் கிருஷ்ணரின் வாகனமாக கருடனுக்கு பலராமரை பிடிக்காது. தன் பெயரில் உள்ள ராமரை நீக்க வேண்டும் என்று சொல்கிறவர். கிருஷ்ணருக்கு எதிராக பலராமர் போடும் திட்டங்களை கருடன் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இதனை காமெடியாக சொன்ன படம்.
'இது புராண காமெடி தமிழ் பேசும் படம்' என்றே படத்தை விளம்பரம் செய்தார்கள். இந்த படத்தை ஆர்.பத்மநாபன் இயக்கினார். அவரது பேனரான ஓரியண்டல் பிலிம்ஸின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், கோல்கட்டாவில் உள்ள பயனீர் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. புகழ்பெற்ற பாடகர் செருகளத்தூர் சாமா கிருஷ்ணராகவும், வித்வான் சீனிவாசன் நாரதராகவும் நடித்தார். இசையமைப்பாளர் எம்.டி.பார்த்தசாரதி அனுமானாகவும் நடித்தனர் சத்யபாமாவாக எம்.எஸ். மோகனாம்பாள் நடித்தார்.