சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் தியேட்டர்களில் வெளியாகி 1100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதன்பின் ஓடிடி தளங்களில் வெளியாகி அங்கும் பல கோடி மணி நேரப் பார்வைகளைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் டிவி உரிமை விற்பனை எதிர்பார்த்தபடி நடைபெறாமல் தடுமாறியது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஓடிடி தளங்களின் வளர்ச்சியால் கடந்த சில வருடங்களில் சாட்டிலைட் டிவியில் படங்களைப் பார்ப்பது மிகவும் குறைந்துவிட்டதாம். அதனால், டிவி நிறுவனங்கள் பெரிய படங்களை அதிக விலை கொடுத்து வாங்கத் தயங்கி வருகிறார்களாம். அதன் காரணமாக 'கல்கி 2898 ஏடி' படத்திற்கும் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் போயுள்ளது.
முதலில் ஸ்டார் மா டிவியிலும், பின்னர் ஜீ டிவியிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள் படத்தயாரிப்பாளர்கள். அங்கு வியாபாரம் முடிவடையாத நிலையில் தற்போது ஜெமினி டிவியில் படத்தை நல்ல விலைக்கு விற்றுள்ளார்கள் என்று சொல்கிறார்கள். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம்.
இனி வரும் காலங்களில் பெரிய படங்களின் சாட்டிலைட் டிவி உரிமை என்பது இறங்குமுகமாகவே இருக்கும் என்பதே உண்மை. அதற்குப் பதிலாக ஓடிடி உரிமை மட்டுமே நல்ல விலைக்கு விற்கப்படலாம்.