டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய்யின் 69வது படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய், படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மமிதா பைஜு, வில்லனாக நடிக்க உள்ள பாபி தியோல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நேற்று பூஜை முடிந்த சில மணி நேரங்களில் அதன் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டனர். உடனடியாக சமூக வலைத்தளங்களில் அது வைரலானது. படத்தில் ரசிகர்களைக் கவரும் விதத்தில் இடம் பெற்றுள்ள பூஜா ஹெக்டே, மமிதா பைஜு இருவரும் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை அவர்களது இன்ஸ்டா தளங்களில் பதிவிட்டனர்.
அதில் 27 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள பூஜாவின் பதிவுக்கு 14 லட்சம் லைக்குகளும், வெறும் 3 மில்லியன் பாலோயர்களை மட்டுமே வைத்துள்ள மமிதாவின் பதிவுக்கு 16 லட்சம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் பூஜாவை விடவும் மமிதாவுக்குத்தான் அதிக லைக்குகள், வரவேற்பு என்பதை ரசிகர்கள் நிரூபித்துள்ளனர்.
விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் இதற்கு முன்னர் பூஜா ஜோடியாகவே நடித்திருந்தாலும், விஜய்யுடன் முதன் முதலில் நடிக்க உள்ள மமிதாவை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். விஜய்க்கு மலையாள ரசிகர்கள் அதிகம் என்பதால் மலையாளியான மமிதாவின் பதிவுக்கு அவர்கள் அதிக லைக்குகள் போட்டுவிட்டார்கள் போலிருக்கிறது.