விவாகரத்து கோரி ஜிவி பிரகாஷ், சைந்தவி மனு தாக்கல் | சலார் சிறுவனை எம்புரானில் நடிக்க வைத்தது ஏன் ? பிரித்விராஜ் ருசிகர தகவல் | சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் ; வழக்கு விசாரணையை முடித்த சிபிஐ | ராபின் ஹுட் புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர் | ராஷ்மிகா மகளுடனும் ஜோடியாக நடிப்பேன் : சல்மான்கான் | எதுக்கு கடைசி நேர டென்ஷன் ? பிரித்விராஜ் நெத்தியடி கேள்வி | மலையாளப் படத்திற்கு முக்கியத்துவம் தரும் ரெட் ஜெயண்ட்? | பிரியதர்ஷினின் 100வது படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால் | கும்பகோணம் கோவில்களில் சோபிதா துலிபலா சாமி தரிசனம் | மூக்குத்தி அம்மன் 2 : நயன்தாரா, சுந்தர் சி மோதல், நின்ற படப்பிடிப்பு |
அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் அர்ஜூன் தாஸ், அதிதி ஷங்கர் இருவரும் இணைந்து நடித்து வந்தனர். தற்போது இந்த படத்திற்கு 'ஒன்ஸ் மோர்' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இதற்கு மலையாள இசையமைப்பாளரான ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கின்றார். குட் நைட், லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரித்துள்ளனர். 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளனர். ஏற்கனவே இதே தலைப்பில் சிவாஜி, விஜய் நடித்த 'ஒன்ஸ்மோர்' எனும் படம் கடந்த 1997ல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.