மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் | ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வேட்டையன்'. வரும் அக்டோபர் 10ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ரஜினிகாந்த், என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் நாளை (அக்டோபர் 2) ரிலீஸாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், படத்திற்கு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 47 நிமிடங்கள் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.