‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
எழுத்தாளர்கள் இயக்குனராவது இப்போது சகஜம். ஆனால் அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் சினிமாவை கடுமையாக எதிர்த்தார்கள். சினிமாவே பார்க்க மாட்டேன் என்று சில எழுத்தாளர்களும், சினிமாவுக்கு பாடல் எழுத மாட்டேன் என்று சில எழுத்தாளர்களும் வாழ்ந்து முடிந்தார்கள். ஆனால் இவற்றுக்கு இடையில் அன்றைக்கு பிரபலமாக இருந்த எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தார்.
கொத்தமங்கல் சுப்பு எழுதிய 'தில்லானா மோகனாம்பாள்' என்ற தொடர்தான் அதே பெயரில் திரைப்பட காவியம் ஆனது. இதுதவிர பந்தலூர் பாமா, பொன்னி வனத்து பூங்குயில், ராவ் பஹதூர் உள்ளிட்ட பல நாவல்களை எழுதினார். 100க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார்.
1935ம் ஆண்டில் கே.சுப்பிரமணியம் இயக்கிய 'பட்டினத்தார்' படத்தின் மூலம் நடிகர் ஆனார். பின்னர் சந்திரமோகனா, மைனர் ராஜாமணி, அனாதைப் பெண், அதிர்ஷ்டம், திருநீலகண்டர், சாந்த சக்குபாய், அடங்காப்பிடாரி, கச்ச தேவயானி, மதனகாமராஜன், தாசி அபரஞ்சி போன்ற படங்களில் நடித்தார்.
1945ம் ஆண்டில் 'கண்ணம்மா என் காதலி' என்ற படத்தை இயக்கினார். இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் சுப்புவே எழுதியிருந்தார். 1947ல் 'மிஸ் மாலினி' படத்தை இயக்கி, அதில் தானே கதாநாயகனாக நடித்தார். 1953ம் ஆண்டில் 'அவ்வையார்' என்ற மெகா பட்ஜெட் படத்தையும் இயக்கி வெற்றி கண்டார்.