சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து பிரபலமாகி குட்டிப்புலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் பால சரவணன். தொடர்ந்து திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, ராஜா மந்திரி, உள்குத்து உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் வெளியான பேச்சி என்கிற ஹாரர் படத்தில் அதில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர்களை விட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பால சரவணனின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது,
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் நாயகன் ஹரீஷ் கல்யாணின் நண்பனாக படம் முழுவதும் பயணிக்கும் விதமான கதாபாத்திரத்தில் பால சரவணன் நடித்திருந்தார். படத்தில் இவர் அடிக்கும் ஒவ்வொரு கமெண்ட்டுகளும் தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்தின. இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதி பால சரவணனை நேரில் அழைத்து முத்தம் கொடுத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள பால சரவணன் கூறும்போது, “லப்பர் பந்து பார்த்துவிட்டு நேரில் அழைத்து, பாலா டேய் உன்னை படத்துல அவ்வளவு ரசிச்சேண்டா. உனக்கு தியேட்டர்ல மக்கள் கை தட்டும்போது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சுடா தம்பின்னு கட்டி அணைத்து முத்தமிட்டு அன்பாய் பாராட்டிய அன்பு அண்ணன் விஜய்சேதுபதிக்கு மனமார்ந்த நன்றிகளும் அன்பு முத்தங்களும்” என்று கூறியுள்ளார்.
பாலசரவணன் அறிமுகமான புதிதில் விஜய்சேதுபதியுடன் இணைந்து பண்ணையாரும் பத்மினியும் படத்திலும் இன்னும் வெளிவராத இடம் பொருள் ஏவல் என்கிற படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.