ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
கோட் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சிம்ரன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அசுரன், துணிவு, வேட்டையன் படங்களில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், விஜய் 69வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் அவர் நடிப்பது குறித்து இயக்குனர் எச்.வினோத் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு அஜித் நடிப்பில் தான் இயக்கிய துணிவு படத்தில் மஞ்சு வாரியர் நடித்தபோதே எனது அடுத்த படத்தில் கண்டிப்பாக நீங்கள் இருப்பீர்கள் என்று கூறியிருந்த எச்.வினோத், தான் அவருக்கு அப்போது கொடுத்த வாக்குறுதிபடியே விஜய் 69வது படத்திலும் அவரை இணைத்திருப்பதாக கூறப்படுகிறது.