'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகம் முழுக்க வெளியிடுகிறது. இதன் காரணமாக வேட்டையன் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த தியேட்டர்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் 'பிளாக்' என்ற படமும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினியின் வேட்டையன் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது என்றதும், சூர்யாவின் கங்குவா நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜீவாவின் 'பிளாக்' படத்தை அதே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். என்றாலும் பெருவாரியான தியேட்டர்களில் ரஜினியின் வேட்டையனே வெளியாவதால் பிளாக் படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் என்று தெரிகிறது.