ஹாலிவுட் ரேஸ் படங்களில் நடிக்க விரும்பும் அஜித்குமார் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா நாயகன் வில்லனாக மிரட்டிய “நூறாவது நாள்” | நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' |
சின்னத்திரை நகைச்சுவை கலைஞரான புகழ் ‛குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவருக்கு பென்சி என்பவருடன் திருமணம் முடிந்த நிலையில், ரித்தான்யா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. நேற்றைய தினம் தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய புகழ், ‛என் வாழ்வை மாற்றிய பொக்கிஷம் நீ. நீ வந்த நாளில் இருந்து எங்கள் வாழ்க்கை வசந்தமாய் மாறியது. முதன் முதலாக உன்னை என் கைகளில் ஏந்தியதை என்னால் மறக்கவே முடியாது. இனி வரும் காலம் முழுவதும் எங்கள் வாழ்வை கருவறையாக்கி உன்னை சுமக்கப்போகிறோம். மகளாய் வந்துள்ள மகாராணிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.