சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
சின்னத்திரை சீரியல்களுக்கு சினிமாவை விட நல்ல மவுசு கிடைத்து வருகிறது. இந்நிலையில், சீரியலையே சினிமாவை போல் 2:30 மணி நேரம் ஒளிபரப்பு செய்யும் முயற்சியில் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குழுவினர் இறங்கியுள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தை கிள்ளாதே தொடரில் ஜெய் ஆகாஷ், ரேஷ்மா முரளிதரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் வருகிற செப்டம்பர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடந்து 2:30 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது. சினிமாவில் வருவது போலவே இரண்டரை மணி நேரத்தில் காதல், வில்லன், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களையும் அடக்கி இதற்கென ஸ்பெஷலாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.