அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
சின்னத்திரை நடிகை சித்ரா, வேகமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹேம்நாத் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஹேம்நாத்தை விடுதலை செய்தது.
தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் 'அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கீழ் கோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை. எனவே ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.