'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பிக்பாஸ் சீசன் 8 மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான விக்ரமன் அளித்த ஒரு பேட்டியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது சரி என நினைக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்ரமன், 'ஒரு முறை பிக்பாஸ் வீட்டிற்குள் சாப்பாடு பிரச்னை வந்தது. அப்போது கமல்ஹாசன் நாம் அனைவரும் உழைப்பது சாப்பிட தான். அந்த சாப்பாட்டை அவருக்கு பஞ்சம் இல்லாமல் கொடுங்கள். வேண்டுமானால் என் சம்பளத்தை குறைத்துக் கொண்டு அந்த பணத்தில் அவர்களுக்கு சாப்பாடு கொடுங்கள் என்று கூறினார்.
இதுபோல் வேறு யாரும் செய்வார்களா? என்று தெரியவில்ல. விஜய் சேதுபதி வளர்ந்து வரும் நடிகர். அவர் நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்கிறார் என்பதை வைத்து தான் கருத்து சொல்ல முடியும். கமல்ஹாசனுக்கே அதிகமான விமர்சனங்கள் வந்தது. அதுபோல விஜய் சேதுபதிக்கு விமர்சனங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இருக்க வேண்டும்' என்று விக்ரமன் கூறியுள்ளார்.