தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து |

தலைவி படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான அதிரடி ஆக் ஷன் படம் ‛மிஷன் சாப்டர் 1'. இந்த படத்திற்கு பின் விஜய்யின் அடுத்த படம் குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாதவன், கங்கனா ரணாவத் இருவரையும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் ஏ.எல்.விஜய். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு 'லைட்' என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள். ஏற்கனவே மாதவன், கங்கனா நடிப்பில் தனு வெட்ஸ் மனு என்ற ஹிந்தி படம் வெளியானது. அதேப்போல் விஜய் இயக்கிய தலைவி படத்தில் கங்கனா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.