பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா | 'டிமான்டி காலனி 3' பணியில் அஜய் ஞானமுத்து! | ரூ.25 கோடிக்கு பிஸ்னஸ் ஆன 'பேடி' பட ஆடியோ உரிமை | உடை மாற்றும் போது அத்துமீறிய இயக்குனர்! - ஷாலினி பாண்டே | 'ரெய்டு 2' படத்தில் சிறப்பு பாடலில் தமன்னா! | 'சாரி' கவர்ச்சி படமல்ல, கருத்து படம்: ராம் கோபால் வர்மா | பிளாஷ்பேக் ; ஒரே ஆண்டில் 15 படங்கள், ஒரே நாளில் 3 படங்கள் : மோகன் சாதனை | பிளாஷ்பேக் : மனைவியை தமிழில் அறிமுகப்படுத்திய தெலுங்கு இயக்குனர் | வடிவேலு இறங்கி வருவார்... என் ஒரு கோடி இன்னமும் அவரிடம் தான் உள்ளது : ஆர்கே |
கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான் மற்றும் பலர் நடித்துள்ள 'தேவரா' படத்தின் முதல் பாகம் நாளை செப்டம்பர் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்திற்கு ஆந்திரா, தெலங்கானா ஆகிய தெலுங்கு மாநிலங்களில் சிறப்பான முன்பதிவு நடைபெற்று வருகிறது. அதற்கடுத்து கர்நாடகாவில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறதாம். அதே சமயம் ஹிந்தி மற்றும் தமிழில் எதிர்பார்த்த அளவில் இல்லை என்கிறார்கள்.
இதுவரையில் இந்தியாவில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். அதன் மூலம் மட்டுமே 100 கோடிக்கும் அதிகமான தொகை வசூலாகியுள்ளது. இந்த டிரென்டிங்கில் பார்த்தால் படத்தின் முதல் நாள் வசூலும் 100 கோடியைக் கடக்கும் என தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் நம்புகிறார்கள்.
தனி ஹீரோவாக ஜுனியர் என்டிஆரின் முதல் நாள் 100 கோடி வசூலாக இது அமையலாம். படத்திற்கான வரவேற்பு ஹிந்தியிலும் அதிகம் இருந்தால் முதல் வார இறுதி நாள் வசூலில் இந்தப் படம் பெரிய வசூலைக் குவிக்கலாம். படம் வந்த பிறகுதான் எதிர்பார்ப்பு அதிகரிக்குமா இல்லையா என்பது தெரிய வரும்.