பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் | விவாகரத்து ஆனவர்களுடன் கனிவோடு இருங்கள் : மீரா வாசுதேவன் | தாடி பாலாஜிக்கு 1 லட்சம் மருத்துவ உதவி: தயாரிப்பாளர் வழங்கினார் | பிளாஷ்பேக்: 200 படங்களில் ஒரேஒரு படத்தில் மட்டும் ஹீரோயினாக நடித்தவர் | அரசன் படத்தில் சிம்பு ஜோடி யார் | வேல்ஸ் வசமான ஈவிபி : புதிய பிலிம் சிட்டியை திறந்து வைக்கும் நிர்மலா சீதாராமன் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த ராஜேஷ் | எம்.எஸ்.பாஸ்கர் படத்தின் மூலம் இயக்குனர் ஆன ப்ராங்க் ஸ்டார் ராகுல் | ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்கள் அறிவிப்பு | கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு |

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் 'சகாப்தம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு 'மதுரவீரன்' என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. 'தமிழன் என்று சொல்' என்ற படத்தில் விஜயகாந்துடன் நடித்தார், அந்த படம் வெளிவரவில்லை. தற்போது யானை பாகனாக 'படைத் தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் புதிய படம் ஒன்றிலும் நடிக்கிறார். ஸ்டார் சினிமாஸ் சார்பில் முகேஷ் டி.செல்லையா தயாரிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி படங்களை இயக்கிய பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். புதுமுகம் தார்னிகா நாயகியாக அறிமுகமாகிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், கல்கி ராஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் பொன்ராம் கூறும்போது “கிராமத்து பின்னணியில் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது. தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது” என்றார்.