உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் வேட்டையன். ரஜினியுடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. மேலும், அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் ரஜினி என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக நடித்திருக்கிறார் .
இந்த நேரத்தில் தற்போது வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு ஒன்று கசிந்துள்ளது. அது என்னவென்றால், குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யும் ரஜினி கொலை குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை என்கவுண்டர் செய்கிறார். ஆனால் அதன் பிறகுதான் அந்த நபர் குற்றவாளி அல்ல. சில முக்கிய புள்ளிகள் அவரை குற்றவாளி ஆக்கி இருக்கிறார்கள் என்ற உண்மை ரஜினிக்கு தெரியவருகிறது. இதனால் கொதித்தெழும் ரஜினி, அந்த நபர் மீது வீண்பழி சுமத்தி தன்னை தவறுதலாக என்கவுண்டர் செய்ய வைத்த புள்ளிகளுக்கு எதிராக களமிறங்கி, அந்த நபரின் குடும்பத்திற்கு நீதி வாங்கி தருவதே இந்த வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு என்பது தெரியவந்துள்ளது.