பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையில், கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ள படம் 'மெய்யழகன்'. இப்படத்தின் டிரைலர் யு டியுப் தளத்தில் வெளியிடப்பட்டது.
தனது முதல் படத்தில் பிரிந்து போன காதலைப் பற்றிச் சொன்ன பிரேம்குமார் இந்தப் படத்தில் பிரிந்து போன உறவுகளைப் பற்றிச் சொல்ல உள்ளார் என்பது தெரிகிறது. தனது சொந்த கிராமத்தை விட்டு எங்கோ போன அரவிந்த்சாமி மீண்டும் தனது கிராமத்திற்கு வந்து உறவுகளை சந்திப்பதுதான் படத்தின் கதையாக இருக்கலாம் என டிரைலர் உணர்த்துகிறது.
தஞ்சாவூர் பின்னணிப் படம் என்பதை டிரைலரின் ஆரம்பக் காட்சியே உணர்த்துகிறது. தஞ்சைப் பெரிய கோயில் பின்னணியில் பயணிக்கும் ரயில் காட்சியோடு ஆரம்பமாகும் டிரைலர் கடைசியில் கார்த்தி பேசும் 'எல்லாம் நாம கடந்து வந்த பொற்காலம்' என முடியும் வரை உறவுகளின் உணர்வுகளை, பாசத்தை, தவிப்பை, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அரவிந்த்சாமி, கார்த்தி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா என டிரைலரில் இடம் பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்களும், அவர்களின் பெயர்களும் படம் வெளிவந்த பின் நம் மனதில் அழுத்தமான இடத்தைப் பிடிக்கும் என யூகிக்க முடிகிறது.
கோவிந்த் வசந்தா பின்னணி இசையில், கமல்ஹாசன் பாடும், 'யாரோ இவன் யாரோ' உருக வைத்துவிடுகிறது.
'96' படத்தில் நம் மனதில் இடம் பிடித்த “ராம், ஜானு” போல இந்த 'மெய்யழகன்' படத்தின் “அத்தான், மச்சான்” நம் மனதில் இடம் பிடிப்பார்கள் என்றே தோன்றுகிறது.