ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ராணா, பகத் பாஸில் இருவரும் இருந்தாலும் வில்லனாக ராணா தான் நடித்திருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. அது மட்டுமல்ல பஹத் பாசில் இந்த படத்தில் ஒரு கலகலப்பான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளாராம். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் இன்னொரு மலையாள வில்லனும் இந்த படத்தின் மூலம் தமிழில் நுழைந்துள்ளார் என்பதை பார்க்க முடிகிறது. அவர் வேறு யாருமல்ல வில்லன் நடிகர் சாபுமோன் அப்து சமது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் படத்தில் ஒரு முரட்டு வில்லனாக ரசிகர்களிடம் ரொம்பவே பிரபலமானவர் தான் நடிகர் சாபுமோன்.. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பின்னர் கடந்த 2018ல் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக கோப்பையையும் தட்டி சென்றார். கடந்த வருடம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த மலையாள வில்லன் நடிகர் விநாயகன் ரஜினிக்கு இணையாக பேசப்பட்டார். அந்த வகையில் இந்த வேட்டையன் திரைப்படமும் சாபுமோனுக்கு தமிழில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று தரும் என எதிர்பார்க்கலாம்.




