நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சின்னத்திரை தொகுப்பாளினியான மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகியிருந்தார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட வீடியோ தொலைக்காட்சி, சோஷியல் மீடியா என அனைத்திலும் புயலை கிளப்பியது. சின்னத்திரை பிரபலங்கள் தாண்டி, அரசியல் விமர்சகர்கள் கூட இந்த பஞ்சாயத்தை கையில் எடுத்து மணிமேகலை சரியா? பிரியங்கா சரியா? என தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் ஆரம்பத்தில் மணிமேகலைக்கு சப்போர்ட் செய்த சிலரே கூட திடீரென அந்தர் பல்டி அடித்து மாற்றி பேசியிருந்தனர். பிரபல நடிகை ஷகிலா, மணிமேகலையை ஓடிப்போனவள் என்று தேவையற்ற விமர்சனத்தை வைத்திருந்தார். இந்நிலையில், இதற்கு தற்போது வீடியோ ஒன்றில் பதிலடி கொடுத்துள்ள மணிமேகலை, கூட இருக்கிறவர்களை தான் நம்பவே கூடாது என்று கலாய்க்கும் விதமாக பேசியிருக்கிறார்.
அவரது வீடியோவில் , 'நான் ஓடிப்போனது எங்க அம்மாவுக்கே பிரச்னை இல்லை. ஆனால், சிலர் வித்தியாசமா கூவுறாங்க' என்று ஷகிலாவை தாக்கி பேசியுள்ளார். மேலும், 'சிலர் வாட்சப்பில் ஒரு மாதிரி பேசிவிட்டு, வீடியோவில் வேறு மாதிரி பேசுகிறார்கள். மணி (மணிமேகலை) முக்கியம் இல்லை மணி (பணம் ) தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள். அந்த சொம்புகளுக்கெல்லாம் இனி என்ன மரியாதை?' என்று ஒரே வீடியோவில் அனைவரையும் லெப்ட் ரைட் வாங்கி பேசியிருக்கிறார்.