காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
2024ம் ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களில் இந்தியத் திரைப்படங்களில் தெலுங்குப் படமான 'கல்கி 2898 எடி' படம் 1000 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. அதற்கடுத்து ஹிந்திப் படமான 'ஸ்திரீ 2' படம் 800 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மட்டும் இப்படம் 600 கோடி வசூலைக் கடந்துள்ளதாக மும்பை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'அனிமல், பதான்' ஆகியவற்றின் வசூலைக் கடந்து தற்போது ஹிந்தித் திரையுலக வசூலில் இரண்டாவது இடத்திற்கு இப்படம் முன்னேறி உள்ளது. முதலிடத்தில் 640 கோடிகளுடன் 'ஜவான்'(இந்தியாவில் எல்லா மொழிகள் சேர்த்து) படம் உள்ளது.
மேலும் ஹிந்தியில் மட்டும் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக ஸ்திரீ 2 (ரூ.583 கோடி) நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளது. முன்னதாக முதலிடத்தில் ஜவான்(ரூ.582 கோடி, ஹிந்தியில் மட்டும்) படம் இருந்தது.
'ஜவான்' படத்தில் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்திருந்தார். ஆனால், 'ஸ்திரீ 2' படத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் ஆகியோர்தான் முன்னணி நட்சத்திரங்களாக நடித்துள்ளனர்.
2018ல் வெளியான இப்படத்தின் முதல் பாகம் சுமார் 180 கோடி வசூலை மட்டுமே பெற்றது. அப்போதைய பட்ஜெட் நிலவரப்படி சுமார் 25 கோடியில் தயாரான படம் பெரிய லாபத்தைப் பெற்றுத் தந்தது. 'ஸ்திரீ 2' படத்தின் பட்ஜெட் சுமார் 100 கோடி என்கிறார்கள். ஆனால், அதன் தியேட்டர் வசூலோ 800 கோடிக்கும் மேல். ஓடிடி, சாட்டிலைட் இதர உரிமைகளிலேயே அந்த 100 கோடி முதலீட்டை எடுத்துவிடுவார்கள். அப்படியென்றால் தியேட்டர் வசூல், செலவு போக மீதியெல்லாமே லாபம் தான்.