மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வேட்டையன்' . இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிரூத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இப்படத்திலிருந்து மனசிலாயோ என்கிற முதல் பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் வேட்டையன் படத்திலிருந்து இரண்டாவது பாடலாக 'ஹன்டர் வரார்' எனும் பாடல் நாளை(செப்., 20) வெளியாகிறது என கம்பொசிங் போது எடுத்த வீடியோ உடன் அறிவித்துள்ளார் அனிருத். தெருக்குரல் அறிவு எழுதிய இப்பாடலை சித்தார்த் பசூர் பாடியுள்ளார். இதில், " ஹேய் சூப்பர் ஸ்டாருடா , ஒன் அண்ட் ஒன்லி யாருடா, கெட்ட பையன் சாருடா, ரசிக்காதவன் கிடையா துடா" என்கிற வரிகளில் இப்பாடல் தொடங்குகிறது.