சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிக்பாஸ் சீசன் 8க்கான வேலைகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால் மக்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் முன்னாள் போட்டியாளரான இயக்குனர் பி வாசுவின் மகனான நடிகர் சக்தி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'நான் வாழ்க்கையில் எதிலுமே தோற்றது கிடையாது. சினிமாவிற்கு வந்த பிறகு தான் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறேன். அதிலும் குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது தான் நான் வாழ்க்கையிலேயே செய்த மிகப்பெரிய தவறு. அப்பா போக வேண்டாம் என்று சொன்னார். நான் பிடிவாதமாக போனேன். நான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வந்த பிறகு பல பிரச்னைகளை சந்தித்தேன். அதனால் பல நாட்களாக வீட்டிலேயே முடங்கி கிடந்தேன்' என்று கூறியுள்ளார்.