இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
அசுரன், வட சென்னை, விடுதலை, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தமிழ். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். போலீஸ் பயிற்சியில் நடக்கும் கஷ்டங்களை பற்றி இந்தப்படம் பேசியிருந்தது. முதல் படமும் அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது. அதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் அடுத்து நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இது கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது. இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். படத்தின் போஸ்டரில் கப்பலை குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்து பார்க்கையில் இந்தப்படம் கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டராக படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தின் கதைக்களம் 1960 காலக்கட்டத்தில் ராமேஸ்வரம் பின்னணியில் நடப்பதாக சொல்கிறார்கள்.