ஜனநாயகன்: வழக்கு போடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' லிரிக் வீடியோ | விபீஷணனாக நடிக்கவில்லை ; விஜய்சேதுபதி திட்டவட்டம் | மோகன்லால் மம்முட்டிக்கு நான் வில்லன் தான் ; உறுதி செய்த பஹத் பாசில் | பிப்ரவரி 26ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா திருமணம்? | அப்படி ஒன்றும் அவசியம் இல்லை ; ஓடிடி நிறுவனத்தை அதிர வைத்த 'சூ ப்ரம் சோ' தயாரிப்பாளர் | ஜனநாயகன் பட வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம் | டொவினோ தாமஸ் படத்தில் இணைந்த 'சர்வம் மாயா' நாயகி | பிளாஷ்பேக் ; ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பை மனதில் வைத்து பாக்யராஜ் புத்திசாலித்தனமாக செய்த காரியம் | 'பேட்ரியாட்' டப்பிங்கை நிறைவு செய்த மோகன்லால் |

தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக இருப்பவர் விஜய். கடந்தவாரம் இவர் நடித்த ‛தி கோட்' படம் வெளியாகி ரூ.300 கோடி வசூலை கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பிக்கிறேன் என அறிவிப்பு வெளியிட்டார் விஜய். அதோடு தனது 69வது படத்துடன் சினிமாவை விட்டு விலகுகிறேன் என்றும் சொன்னார். இது அவரது சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது 69வது படத்தின் இயக்குனர் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கடைசியாக எச். வினோத் இயக்க உள்ளார் என கூறப்பட்டது.
நேற்று(செப்., 13) இந்த படத்தை பெங்களூருரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று(செப்., 14) விஜய் 69 படத்தை வினோத் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் வெற்றிக்கான தீபத்தை ஏந்துவது போன்று உள்ளது. மேலும் ‛ஜனநாயகத்திற்கான ஒளி விளக்கு' என குறிப்பிட்டுள்ளனர். இதனால் இது அரசியல் படமாக இருக்கலாம் என தெரிகிறது. மேலும் அனிருத் இசையமைப்பதாகவும், அடுத்தாண்டு அக்டோபரில் படம் ரிலீஸ் என தெரிவித்துள்ளனர்.
69வது படத்துடன் விஜய் அரசியலுக்கு செல்ல உள்ளதால் நிச்சயம் இந்த படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் அதிகம் இருக்கும் என சொல்கிறார்கள். அதன் வெளிப்பாடாகவே இப்பட அறிவிப்பு போஸ்டரும் உள்ளது.




